வடலூர்: வாடகை வாகனத்தை அடகு வைத்து மோசடி- 2 பேர் மீது வழக்கு

2பார்த்தது
வடலூர்: வாடகை வாகனத்தை அடகு வைத்து மோசடி- 2 பேர் மீது வழக்கு
பெண்ணாடம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த திவ்யா (33) என்பவர் தனது மினி லாரியை ஒரு மாத வாடகைக்கு நைனார்குப்பத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (35) என்பவருக்குக் கொடுத்துள்ளார். வாடகைக்கு எடுத்த தமிழ்ச்செல்வன், திவ்யாவிற்குத் தெரியாமல் அந்த மினி லாரியை மருவாயைச் சேர்ந்த ஸ்ரீதர் (41) என்பவரிடம் அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த திவ்யா, வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், தமிழ்ச்செல்வன் மற்றும் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி