கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா (24) என்பவர் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது அவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தந்தை ராமநாதன் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.