புதுச்சேரி அடுத்த குருவிநத்தம் பெருமாள் நகரை சேர்ந்த கொத்தனார் பழனி, குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சபை வளாகத்தில் தங்கியிருந்தார். அங்குள்ள கழிப்பறையில் குளிக்க சென்றபோது, அவர் பையில் வைத்திருந்த ரூபாய் 3 ஆயிரத்தை பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த அருள் செல்வன் என்ற வெல்டிங் தொழிலாளி திருடியுள்ளார். இது குறித்து பழனி அளித்த புகாரின் பேரில், வடலூர் காவல் துறையினர் அருள் செல்வனை கைது செய்து, திருடப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.