கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு மாருதி நகர் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.