குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வடலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆவணமின்றி பைக்கில் சென்ற சிவகண்டன் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். விருத்தாச்சலம் தாலுகாவைச் சேர்ந்த சிவகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் பெற்று பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறினார். ஆவணங்கள் இல்லாததால், பணம் குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.