விழப்பள்ளம்: மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி வழிபாடு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்கழணி மாரியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மன் திருத்தேரில் திருக்கோவில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.