கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கன்னித்தமிழ்நாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (3 ஆம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று இரவு யாகசாலை பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.