
குள்ளஞ்சாவடி: சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தா வட்டம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணமூர்த்தியின் மகன் மதியழகன் (29), சொந்த வேலை காரணமாக கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பும் வழியில், தம்பிப்பேட்டை அருகே டி.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








































