கடலூர்: ஒரே நாளில் 472 மனுக்கள் அளிப்பு

0பார்த்தது
கடலூர்: ஒரே நாளில் 472 மனுக்கள் அளிப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் பொதுமக்களிடமிருந்து வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 472 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.