கடலூர்: என்எல்சி சுரங்க உபரி நீர் வெளியேற்றும் குழாயில் உடைப்பு

60பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்கம் ஒன்று மற்றும் சுரங்கம் ஒன்று ஆகிய இரண்டு சுரங்கங்களில் தேங்கும் உபரிநீரை ராட்சச குழாய்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றும் ராட்சச குழாயில் தற்போழுது உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கிறது. 

எனவே என்எல்சி நிறுவன ஊழியர்கள் உபரி நீர் வெளியேற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வரும் நிலையில் உடனடியாக அதனை சீரமைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி