கடலூர் மாவட்டம் மீனாட்சிபேட்டையைச் சேர்ந்த 30 வயது வீரமணி, 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். மாணவியுடன் வீடியோ கால் பேசியதை ஆபாச பாடமாக சித்தரித்து, இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து, வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.