கடலூர் மாவட்டம் எழுமேடு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிளை கழக செயலாளர் என். ராமு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கூடுதல் நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.