நெய்வேலி அருகே தீ விபத்து: மின்கசிவால் பெரும் சேதம்

595பார்த்தது
நெய்வேலி அருகே தீ விபத்து: மின்கசிவால் பெரும் சேதம்
நெய்வேலி அருகே வடக்கு மேலூரில் கமலக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான ஹாா்டுவோ்ஸ் மற்றும் மாட்டுத் தீவனக்கடை வியாழக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிச் சென்ற நிலையில், இரவு 10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ளவா்கள் அளித்த தகவலின் பேரில், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி