குள்ளஞ்சாவடி: இருசக்கர வாகனங்கள் மோதி வாலிபர் உயிரிழப்பு

1பார்த்தது
குள்ளஞ்சாவடி: இருசக்கர வாகனங்கள் மோதி வாலிபர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சமட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), குள்ளஞ்சாவடி கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, விபத்தை ஏற்படுத்திய தொளுவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவா மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி