குள்ளஞ்சாவடி: டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

739பார்த்தது
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே பள்ளி நீரோடை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (22), ஏப்ரல் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்பப் பெறக் கோரி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி