கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்குப்பம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ முத்தாலம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இன்று முதல் மண்டல அபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.