குறிஞ்சிப்பாடி அருகே சீயாண்டவர் கோவிலில் இலட்சதீப திருவிழா

1பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை, விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், கீழூர், பெரியகோவில்குப்பம், ஆயிப்பேட்டை ஆகிய எட்டு கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ சீயாண்டவர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ வீரனார், ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் இலட்சதீப திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பெரியகோவில்குப்பம் கிராமம் சார்பில் சுவாமிக்கு சந்தன அபிஷேகம், காவடி வீதியுலா, திருக்கல்யாணம் மற்றும் மஞ்சள் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. எட்டு ஊர் கிராம வாசிகள் சார்பில் இலட்சதீப திருவிழா மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.