கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அண்ணா நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.