முத்தாண்டிக்குப்பம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது

56பார்த்தது
முத்தாண்டிக்குப்பம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் காவல் துறையினர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சொரத்தூரைச் சேர்ந்த மாம்பழம் என்ற அசோக் ராமன், ரவிக்குமார் என்பதும் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி