கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வ சேகர் வாகன தணிக்கையின் போது, அரசு அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். லாரி ஓட்டுநர் சிகாமணி தப்பியோடினார். லாரி நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.