நெய்வேலி: நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்

673பார்த்தது
நெய்வேலி: நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்
நெய்வேலி 12 வது வட்டம் மணிப்பூர் சாலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கனிஷ்கா (25), பி.காம் பட்டதாரி. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 8 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 23 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த கனிஷ்கா திடீரென மாயமானார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி