கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்தில் உள்ள நெல் வயலில், மின் மோட்டார் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ் பார்மரை மர்ம நபர்கள் உடைத்து, சுமார் ரூ. 1,30,000 மதிப்புள்ள காப்பர் வயரை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வடக்குத்து மின்வாரிய உதவி மின் பொறியாளர் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி டவுன் ஷிப் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.