நெய்வேலி: மின்சாரம் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

3பார்த்தது
நெய்வேலி: மின்சாரம் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சின்னகாப்பான்குளத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிய மகன், மின்சார சுவிட்ச் பாக்ஸ் அருகே தனது தந்தை கலியபெருமாள் (85) மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.