கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பி. டி. ஆர் நகர் அருகே அனுமதியின்றி அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த அகதீஸ்வரன் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ₹1,500 மதிப்பிலான மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.