நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், தமிழ்நாடு அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் ₹2.8 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்குத்து SPT மணிநகர் சாலைக்கு ₹99 லட்சம் மற்றும் ஆயிப்பேட்டை முதல் வடக்குத்து வரையிலான சாலைக்கு ₹1.9 கோடி என மொத்தம் ₹2.8 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் இந்த சாலைப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.