நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேய்கானத்தம், சிவனந்திபுரம், அப்பியம்பேட்டை, கோரணப்பட்டு, கோ-சத்திரம், நெய்வேலி வட்டம் 21 உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பாமக, அதிமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது.