கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெரியகோவில்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் குப்புசாமி தொழிலாளி இவர் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் - சென்னை சாலையில் கீழ் வடக்குத்து நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அவரது மனைவி சரண்யா நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.