நெய்வேலி அடுத்த வடக்குத்து தனியார் மஹாலில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாமகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பாமகவின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார்.