கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து பகுதியை சேர்ந்த சித்ரா (51) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார், சித்ராவின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.