கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த என்எல்சி பொறியாளர் வேணுகோபால் (32), நெய்வேலியில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்எல்சி சுரங்கம் 2 பகுதியில் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவரை வியாழக்கிழமை காலை முதல் தொடர்பு கொள்ள முடியாததால், நண்பர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இரவு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நெய்வேலி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.