செஞ்சி அருகே 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த மினி லாரி டிரைவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுமி உடல்நலக்குறைவால் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.