பெரியாக்குறிச்சி: பேருந்தில் நகை திருட்டு

2பார்த்தது
பெரியாக்குறிச்சி: பேருந்தில் நகை திருட்டு
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராமபிரியா (65) என்பவர், கடந்த 1 ஆம் தேதி இரவு பெங்களூரிலிருந்து தனியார் பஸ் மூலம் குடும்பத்தினருடன் நெய்வேலிக்கு வந்துள்ளார். வீடு திரும்பியதும், தனது கைப்பையில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி