கடலூர் மாவட்டம் புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை பிப்ரவரி 25 ஆம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். அம்பலவாணன்பேட்டை, புலியூர், சந்தைப்பேட்டை, சம்மட்டிக்குப்பம், புலியூர் காட்டுச்சாகை, கிருஷ்ணம்பாளையம், திரட்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.