கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் பண்ருட்டி அருகே சமத்துவபுரம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்மேகம் மகன் கவுதம் மற்றும் 18 வயதுடைய சிறுவன் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.