கடலூர் மாவட்டம் வடலூர் நகர திமுக சார்பில், வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் அருகில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.