கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி செல்வி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவருக்கும் இடையே வீட்டு மனை தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஸ்ரீமதி தரப்பை சேர்ந்தவர்கள் செல்வியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்விக்கு கொலை மிரட் டல் விடுத்ததாக ஸ்ரீமதி, பார்வதி, ராகுல் ஆகிய 3 பேர் மீது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.