நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர், கருங்குழி பகுதியைச் சேர்ந்த 29 வயது திருநங்கை ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த உறவுக்கு இளைஞரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வடலூரில் ஒரு திருமண விழாவில் பங்கேற்க வந்த இளைஞர் திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து இளைஞரின் தம்பி வடலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது அண்ணனை திருநங்கை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் கோரியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான திருநங்கையைத் தேடி வருகின்றனர்.