வடலூர்: விநாயகர், முருகன், கல்பட்டு ஐயா சன்னதியில் வழிபாடு

372பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. விநாயகர், முருகன், கல்பட்டு ஐயா சன்னதி, சத்திய தரும சாலை, அணையா அடுப்பு ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வடலூர் சத்திய ஞான சபை திடலில் மெகா அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி