கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் மனைவி மலர்கொடி தனது வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குறிஞ்சிப்பாடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் அவர் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்த நிலையில் மலர்கொடியை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 3 மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.