வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில், கண்ணுதோப்பு பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பள்ளம் தோண்டும்போது அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் வடலூர் சர்வோதயா நகர் கண்ணன் மனைவி மஞ்சுளா (38) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், மஞ்சுளாவின் கள்ளக்காதலன் சேப்ளாநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சம்பத் (39) என்பவரே மஞ்சுளாவை கொடூரமாக கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. கொலையாளியைப் பிடிக்க அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படைகள் சம்பத்தை கைது செய்துள்ளன.