பண்ருட்டி அருகே கார் டிரைவருக்கு வலை வீச்சு

75பார்த்தது
பண்ருட்டி அருகே கார் டிரைவருக்கு வலை வீச்சு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தேவநாதன் மகன் முருகன். கார் டிரைவரான இவர் புதுச்சேரியை சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியுடன் முருகன் நெருங்கி பழகி வந்ததால் அவள் கர்ப்பிணியானாள். பின்னர் இது குறித்து அந்த சிறுமியின் தாயார் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் கார் டிரைவர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you