நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற டேங்கர் லாரி, பணிக்கன்குப்பம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்துடன் மோதியது. இதைத் தொடர்ந்து, பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி வந்த மற்றொரு லாரி டேங்கர் லாரியின் மீது மோதியது. இந்த விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற புருஷோத்தமன் (32), அஸ்வின்குமார் (34), ஆனந்த் (42) மற்றும் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பழனிச்சாமி (60) ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது.