பண்ருட்டி அருகே 3 பேர் மீது வழக்கு

59பார்த்தது
பண்ருட்டி அருகே 3 பேர் மீது வழக்கு
பண்ருட்டி அடுத்த எலவத்தடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி இவருக்கு ஜெயமாலா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கலியமூர்த்தி குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று செம்புலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் துரை, மணிகண்டன் ஆகிய 3 பேரும் கலியமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் செம்புலிங்கம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி