தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் பகுதியில் நடத்தப்பட்ட மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து, அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த மாநாடு பிரமாண்ட வெற்றியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.