கடலூர்: செக் மோசடி - மருத்துவர் கைது

2பார்த்தது
கடலூர்: செக் மோசடி - மருத்துவர் கைது
பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதியிடம், கடலூர் அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், குடும்ப செலவிற்காக கடந்த 2021ல் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக பின் தேதியிட்ட செக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் செக்கை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது. இதுதொடர்பாக பார்த்தசாரதி தொடர்ந்த செக் மோசடி வழக்கில், நீதிமன்ற நீதிபதி, சித்த மருத்துவர் செந்தில்குமார் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும், ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.