கடலூர்: நாளை குறைதீர் முகாம்

84பார்த்தது
கடலூர்: நாளை குறைதீர் முகாம்
கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா் மற்றும் திருமுட்டம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் தலைமையில் நாளை 11 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி