தனது கணவன், தனக்கு போதை மருந்தைக் கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டிய ஒரு பெண். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத படி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கணவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மனு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.