கடலூர் மாவட்டம் பண்ருட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி, வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி பரிமளா கேட்டபோது ஏற்பட்ட பிரச்சனையால், பரிமளா தனது மகள் வீட்டிற்கு கோபித்துக்கொண்டு சென்றார். மனைவியை அழைத்து வர மகள் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, பரிமளா வர மறுத்ததால் அங்கு பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, சிகிச்சை பெற மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.