வீடு இடிப்பை கைவிட வேண்டும் - பண்ருட்டி எம்எல்ஏ

416பார்த்தது
வீடு இடிப்பை கைவிட வேண்டும் - பண்ருட்டி எம்எல்ஏ
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றும் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.