கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ். பெயரில் சமூக வலைதளங்களில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த போலி கணக்கு மூலம், காவல் கண்காணிப்பாளரே உரையாடுவது போலவும், உதவி கேட்பது போலவும் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.